மீண்டும் இணையும் சூரரைப் போற்று கூட்டணி, சூப்பர் அப்டேட்!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

சூரரைப் போற்று படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான திரைக்கதை எழுதுவது வேகமாக நடந்து வருகிறது. சுதா கொங்கரா, இயக்கிய முதல் திரைப்படம் ‘இறுதி சற்று’ இது பெரும் வெற்றியைப் பெற்றது.

இரண்டாவது படமான சூரரைப்போற்று, கோபிநாத் இன் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டது. தற்போது சுதா கொங்கரா, சூர்யா கூட்டணியில் உருவாகும் அடுத்த திரைப்படம் பற்றி பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இப்படம் ‘கேங்க்ஸ்டர்’ திரைப்படமாக அமையப்போகிறது. சூது கவ்வும், காதலும் கடந்து போகும் இயக்குனர் நலன் குமாரசாமி இப்படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளை செய்து வருகிறார்.

நலன் குமாரசாமி ஆர்யாவை வைத்து இயக்குவதாக இருந்த படம் தள்ளிப் போனதால், எழுத்தாளராக சுதா கொங்கரா படத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். தியாகராஜா குமாரவேலு தயாரிப்பில் வெப் தொடர்களுக்கான சில எபிசோடுகளை நலன் குமாரசாமி எழுதியுள்ளார்.

சுதா கொங்கரா இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar