தொல்பொருள் திணைக்களத்தின் திட்டமிட்ட அத்துமீறல்கள்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இலங்கைக்கான நேர்வேயின் உயர்ஸ்தானிகர், மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் ஆகியோரை  தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்து பேசியுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று நன்பகல் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் காணி அபகரித்தல்,  சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மண் அகழ்வு உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், இதற்கான ஆதாரங்களுடன் கூடிய ஆவணமும் கையளிக்கப்பட்டது.

இதன்போது தூதுவர்களிடம் விசேட கோரிக்கை ஒன்றினை திரு சாணக்கியன் அவர்கள் முன்மொழிந்திருத்தார். குறிப்பாக தொல்பொருள் என்னும் பெயரில் காணிகள் சூறையாடப் படுவதை தடுக்கும் நோக்குடன் தொல்பொருள் சம்பந்தமான செயற்பாடுகள் அனைத்தும் யுனெஸ்கோ அமைப்பினூடாக சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருந்தார். இதன் மூலம் நாம் எதிர்கொள்ளும் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பு போன்ற பிரச்சனைகளை தடுக்க முடியும் என இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar