தற்காப்புக்காகவே ஆயுதங்கள், யுத்தத்திற்கு அல்ல – வட கொரியா

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

தென் கொரியாவின் ஆயுதக்க குவிப்பும், அமெரிக்காவின் எமது நாட்டிற்கு எதிரான கொள்கைகளுமே எமது ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு காரணம் என்ன வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற கொரிய மத்திய நிறுவனத்தின் “சுய பாதுகாப்பு 2021” என்னும் ஆயுதக் கண்காட்சியை தொடங்கிவைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் நாங்கள் யாருடனும் போரிட விரும்பவில்லை, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், போரை திணித்தால் அதை எதிர்கொள்ளும் நோக்குடனும் ஆயுத பலத்தை அதிகரித்து வருகின்றோம்  என தெரிவித்தார். வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையே அமெரிக்காவின் பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் கிம் ஜாங் உன் குற்றம் சாட்டினார்.

அண்மைய வாரங்களில் வடகொரியா, கப்பலிலிருந்து ஏவும் நீண்ட தூர ஏவுகணை, ரயிலில் இருந்து ஏவும் ஏவுகணை மற்றும் ஹைப்பர் சொனிக் என அடுத்தடுத்து ஏவுகணை பரிசோதனைகளை நடத்தியது. கொவிட்-19 தோற்றுப் பரவலை தடுப்பதற்காக எல்லைகளை வடகொரியா முடியுள்ளதால் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தன் மீதான தடைகளைத் தளர்த்துவதற்க்காக ஒரு உபாயமாக  வடகொரியா ஆயுதப் பரிசோதனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar