ஆப்கானில் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி வேண்டும் – மோடி

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக ஆட்சி நிர்வாகம் அமைய வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக நிர்வாகம் இருக்க வேண்டும். இவ்வாறு ஆப்கானிஸ்தான் குறித்து ஜி20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி ஊடாக பங்கேற்று உரையாற்றுகையில் இந்திய பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பயங்கரவாதத்தின் ஆதாரமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக்கூடாது. ஆப்கான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தங்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும். ஆப்கான் மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவது இந்தியா உணர்ந்துள்ளது. அந்த நாட்டில் இந்திய அரசு சார்பில் ஐநூறுக்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் அடைந்த சமூக பொருளாதார முன்னேற்றம் நீடிக்க வேண்டுமெனில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நிர்வாகம் அமைய வேண்டும். ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உருவாக்க வேண்டும் என மோடி மேலும் கூறினார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar