சிப்ஸ் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

உருளைக்கிழங்கு சிப்ஸ், பிரட், பேக்கரி உணவு பொருட்கள் மற்றும் சொக்லேட் போன்ற தின்பண்டங்கள் அனைவருக்கும் பிடித்தவை. ஆனால் இவைபோன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது குடல் கசிவு நோய் அறிகுறியை ஏற்படுத்தும் என்றும், இதனால் சிறுநீரக நோய் அபாயம் அதிகரிக்கும் என்றும் நொறுக்கு தீனிகள் பற்றிய ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அதிக வெப்பநிலையில் சமைக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மேம்பட்ட கிளைகேஷன் எண்ட் தயாரிப்புகள் (Advanced Glycation End – AGEs) எனப்படும் தீங்கு விளைவிக்கும் இரசாயன சேர்மங்கள் நிறைந்திருப்பதைக் காட்டியது. இந்த இரசாயனங்கள் ரோஸ்ட், ஃபிரை, க்ரில் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளுக்கு சுவையையும் நறுமணத்தையும் தருகின்றன.

இந்த AGE-க்கள் மெயிலார்ட் எதிர்வினை எனப்படும் ஒரு செயல்முறையைத் தூண்டுகின்றன. மேலும் அவை உடலின் ஆபத்து சமிக்ஞைகளை மாற்றி அழற்சி மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு வழிவகை செய்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஓட்ஸ், வேகவைத்து பின்னர் குளிரூட்டப்பட்ட அரிசி, பார்லி, பீன் மற்றும் பருப்பு வகைகளான கறுப்பு பீன்ஸ் மற்றும் பட்டாணி, பச்சை உருளைக்கிழங்கு ஸ்டார்ச், சமைத்து பின்னர் குளிரூட்டப்பட்ட உருளைக்கிழங்கு போன்ற உயர் எதிர்ப்பு ஸ்டார்ச் ஃபைபர் கொண்ட உணவுகளை சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்மபடுத்தும் என்றும் சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இது பற்றி மோனாஷ் மத்திய மருத்துவ பள்ளியின் நீரிழிவு துறையின் இணை பேராசிரியரும் முன்னணி எழுத்தாளருமான மெலிண்டா கோக்லன் கூறியதாவது, “இந்த உணவுகள் உங்கள் கீழ் குடலில் இறங்கி, அடிப்படையில் உங்கள் குடல் பக்டீரியாக்களுக்கான உணவாக செயல்படுகின்றன. குடல் பாக்டீரியாக்களின் அழற்சி எதிர்ப்பு இந்த உணவு உற்பத்தி செய்யும் வளர்சிதை மாற்றங்களை புளிக்க வைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

உலகளவில், 10 சதவீத மக்கள் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பதப்படுத்தப்பட்ட உணவின் அதிகப்படியான நுகர்வு, அதிக இறப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், புற்றுநோய் மற்றும் இரைப்பை குடல் நோய்கள் ஆகிய அபாயத்துடன் தொடர்புபட்டுள்ளது. மேலும் இதுபற்றி கோக்லன் கூறும்போது, ” பெரும்பாலான நடத்தை மாற்றங்களைப் போலவே, உணவு மாற்றங்களையும் நீண்ட காலத்துக்குப் பராமரிப்பது கடினம். ஆனால் எதிர்ப்பு உணவான ஸ்டார்ச் ஃபைபர் மற்றும் நீராவியில் சமைக்கப்பட்ட உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறைக்க முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar