இங்கிலாந்தில் ஆளும் கட்சி MP ஒருவர் கத்தியால் குத்தி கொலை!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனின், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த கட்சியைச் சேர்ந்தவர், டேவிட் அமெஸ். 69 வயதாகும் இவர், எசெக்ஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.

டேவிட் அமெஸ், ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில், தொகுதி மக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்பது வழக்கம். இதன்படி, இன்று வெள்ளிக்கிழமை, எசெக்ஸ் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில், பொது மக்களை சந்திப்பதற்காக வந்தார்.

அப்போது அங்கு வந்த 25 வயது நபர், டேவிட் அமெஸ் அருகே சென்று, மறைத்து வைத்திருந்த கத்தியால், அவரை சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே டேவிட் அமெஸ் உயிரிழந்தார்.

இதை அடுத்து அங்கு இருந்த பொலீசார், எம்.பி.,யை கத்தியால் குத்திய இளைஞரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பட்டப்பகலில் தேவாலய வளாகம் அருகே எம்.பி., ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2016இல் கொல்லப்பட்ட ஒரு எம்.பி.யின் நினைவாக உருவாக்கப்பட்ட ஜோ காக்ஸ் ஃபவுண்டேஷன், ”டேவிட் கத்திக்குத்து சம்பவம் கொடூரமான செயல் என்று கூறியுள்ளது.

மேலும், தொழிலாளர் கட்சித் தலைவர் சர் கேர் ஸ்டார்மெர், ”டேவிட்டுக்கு நடந்த கொடூரமான மற்றும் துயரமான சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது நிலைமை மற்றும் அவரது குடும்பம், ஊழியர்கள் மீதே தமது நினைவு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar