கின்னஸ் சாதனை படைத்த நாய் !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

கோல்டன் ரெட்ரீவர் என்ற நாய் தனது வாயில் 6 டென்னிஸ் பந்துகளை வைத்து சாதனை படைத்திருக்கிறது. பின்னிபாய்மோலி என்பவர் இந்த கோல்டன் ரெட்ரீவர் நாயை வளர்த்து வருகிறார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கோல்டன் ரெட்ரீவர் நாய் தனது வாயில் பந்துகளுடனும், கின்னஸ் சாதனை புத்தகத்துடனும் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் ‘இந்த செய்தி பெரிய செய்திதான். இது நிச்சயமாக எளிதானது அல்ல. இந்த சாதனை மிகப்பெரியது. நானே இந்த சாதனையை படைத்தது போல உணர்கிறேன். என்னுடைய நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் கின்னஸ் நிறுவனத்திற்கும் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.

2017ம் முதலில் பின்னிபாய்மோலியின் தந்தை இந்த கோல்டன் ரெட்ரீவர் நாயை வளர்த்து வந்த நிலையில், இந்த நாய் வாயில் டென்னிஸ் பந்துகளைத் தொடுவதற்கு ஒரு தனித்துவமான திறமை இருப்பதை கண்டறிந்தார். அவர் அடிக்கடி கோல்டன் ரெட்ரீவருக்கு ஒரு டென்னிஸ் பந்தை எறிவார். அது அந்த பந்தை பிடித்து மீண்டும் அவரிடமே எறிந்து விளையடும்.

அவர் சில காலமாக இப்படியே பந்தை பிடிக்கும் பயிற்சி அளித்தார். இதனை தொடர்ச்சியாக ஒரு நாள் இதனை ஏன் சாதனையாக செய்யக்கூடாது என்ற யோசனை தோன்றியது. எனவே கோல்டன் ரெட்ரீவருக்கு தினமும் பயிற்சி அளித்து வந்துள்ளார். பின்னிபாய்மோலி தந்தைக்கு பின்னர் அவரே இந்த பயிற்சியை தொடர்ந்து வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய பின்னிபாய்மோலி, 2020ம் ஆண்டே நாங்கள் இந்த சாதனையை படைத்தோம். இதற்கான சான்று இப்போது தான் கிடைத்துள்ளது. இந்த சாதனைக்கு முதன்மை காரணம் கோல்டன் ரெட்ரீவர் தான். இதற்கு முன்பு 2003ம் ஆண்டில் ஐந்து பந்துகளை வாயில் வைத்து இருந்ததற்கு கின்னஸில் இடம் பெற்றிருந்தது. இதே போல், ஜப்பானில் பீகில் என்ற இனத்தை சேர்ந்த நாய் ஒன்று சாதனை படைத்தது.

ஒரு நிமிடத்தில் 58 முறை நாயும், அதன் உரிமையாளரும் சேர்ந்து ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் சாதனை படைத்தனர். இதற்கு முன்பு இவர்களே நிமிடத்திற்கு 51 என்ற சாதனையும் படைத்தது இருந்த நிலையில் குறித்த சாதனையை அவர்களே முறியடித்தனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar