ஒன்ராறியோவில் இன்று 625 COVID-19 புதிய தொற்றுக்கள்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ஒன்ராறியோ இன்று 625 COVID-19 புதிய தொற்றுக்கள் பதிவாகின, அவற்றில் அரைவாசி டொராண்டோவில் பதிவாகி உள்ளது.

புதிய தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி இப்போது 507 ஆக உள்ளது, ஆகஸ்ட் தொடக்கத்தில் இது 85 ஆக குறைந்து காணப்பட்டது.

இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட புதிய தொற்றுக்களில் , முக்கால்வாசிக்கும் மேற்பட்டவை (484) GTA இல் உள்ளன. மேலும் டொராண்டோவில் 288, பீல் பிராந்தியத்தில் 97, யோர்க் பிராந்தியத்தில் 41, டுர்றாம் பிராந்தியத்தில் 25 மற்றும் ஹால்டன் பிராந்தியத்தில் 33 பதிவாகி உள்ளன.

இதற்கிடையில், ஒன்ராறியோவின் 34 பொது சுகாதார பிரிவுகளில் 11இல் கடந்த 24 மணிநேரங்களில் புதிய தொற்றுக்கள் எதுவும் பதிவாகவில்லை.

மாகாணம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின் அடிப்படையில் தற்போது ஒவ்வொரு 10 முதல் 12 நாட்களுக்கு தொற்றுக்கள் இரட்டிப்பாகி வருவதாகவும், அக்டோபர் முதல் பாதியில் தொற்றுக்கள் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 1,000 ஐத் தாண்டக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar