இஸ்லாமிய மத அனுஸ்டானங்களின் கீழ் ஹிஜாப் அணிவது கட்டாயமல்ல என்று கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இஸ்லாமிய மத அனுஸ்டானங்களின் கீழ் ஹிஜாப் அணிவது கட்டாயமல்ல என்று கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்திய கர்நாடக மாநிலத்தில், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கதனது தீர்ப்பை அறிவித்துள்ளது. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தான.
அண்மையில், கர்நாடகாவிலுள்ள உடுப்பி அரசு மகளிர் பல்கலைக்கழகத்தில் ஆறு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பாடங்களுக்கு சமூகமளித்ததால் அம்மாணவிகளை அப் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியேற்றியது. இச்சம்பவமானது அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பின்னர் கல்லூரி நிர்வாகத்தைக் எதிர்த்து மாணவியர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இவ் வழக்கின் தீர்ப்பை கர்நாடக இன்று நீதிமன்றம் வெளியிட்டது.
இத்தீர்ப்பினால் கர்நாடக மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் கர்நாடகம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பதுடன் பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசாங்கம் விதித்திருக்கிறது.