அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைப்பு- லங்கா சதொச நிறுவனம்

லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த வாரம் விலை குறைக்கப்பட்ட 12 அத்தியாவசியப் பொருட்களுக்கு மேலதிகமாக, மேலும் 03 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

நாளை (07) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலைச் சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன்படி, டின்மீன் (425கிராம்) புதிய விலை 490 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1 கிலோ பெரிய வெங்காயத்தின் புதிய விலை 97 ரூபாவாகும். 1 கிலோ கோதுமை மாவின் புதிய விலை ரூ.225 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 500 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களுக்கு விதிவிலக்கான விலைக் குறைப்பு மற்றும் தள்ளுபடி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லங்கா சதொச மக்களுக்கு தெரிவிக்கின்றது.

Spread the love