சுமார் 1,500 கொள்கலன்கள் கட்டணம் செலுத்தி விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய கடன் உதவியின் கீழ் குறித்த கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் நேற்று முன்தினம் (22) நிதி அமைச்சுடன் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளதுடன், துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களில் மக்களின் நாளாந்த நுகர்வுப்பொருட்களான கோதுமை மா, அரிசி, சீனி, கடலை மற்றும் மிளகாய் உள்ளிட்டவை அதிகளவில் காணப்படுவதாக அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த பொருட்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவ்வாறு ஏற்படும் தாமதத்திற்காக கப்பல்களுக்கு மேலதிக கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவ்விதம் தாமதக்கட்டணம் அதிகரிக்கும்போது பொருட்களின் விலை கிலோவுக்கு 10 முதல் 35 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளதுடன், தாமதத்தினால் அதிகரிக்கும் கப்பல்களுக்கான கட்டணத்தை இந்திய ரூபாயில் செலுத்த வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் உணவுப்பொருட்களின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்பதாக கொள்கலன்களை விடுவிக்கப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.