அத்தியாவசிய மருந்துகளை அவசர கொள்முதல் முறையில் கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானம்

தற்போது தட்டுப்பாடு நிலவும் 50 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை அவசர கொள்முதல் முறையின் மூலம் கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதில் X-ray அட்டைகளும் உள்ளடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

அவசர கால கொள்வனவு முறைமையின் ஊடாக இந்த மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அரச வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாகக் காணப்படும் அத்தியாவசிய மருந்துகளின் எண்ணிக்கை 110ஐ தாண்டியுள்ளது.

Spread the love