உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி அலகாசிங், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நேற்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு முன்பை விட வலுவான ஆதரவை வழங்குமாறு இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப்பொருள்களின் தட்டுப்பாடு தொடர்பில் இச்சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.