அவசர கால சட்டம் நீக்கம்- அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

நேற்று(05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், அவசர கால சட்டத்தை நீக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் அவசர கால நிலை பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினால் இது குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், நேற்று(05) பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் பேசப்பட்டது.

அவசர கால சட்டத்தை தொடர்ந்து நீடித்துச் செல்வது தொடர்பில் பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேற்று(05) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். எவ்வாறாயினும், இது தொடர்பான விவாதமொன்றை நடத்துவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அவசர கால நிலையை நீக்கி ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Spread the love