நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, அடுத்தவாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலம் நேற்றுமுன்தினம்(12ம்திகதி) பதிவிட்ட டுவிட் பதிவிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக பதிவு செய்துள்ளது.
மேலும் “நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களை அடுத்தவாரம் இந்தியாவிற்கு வரவேற்பதற்கு தாம் ஆவலுடன் காத்திருப்பதாகவும், இந்தியா – இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கான பொருளாதார பங்குடைமையை மேலும் வலுவாக்குவதற்கான முயற்சிகளை அவரது விஜயம் வலுவூட்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது“ என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.