இன்றும்(24), 23 வலயங்களும் உள்ளடங்கும் வகையில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கிணங்க A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதேபோன்று P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரையிலான காலப்பகுதியில் நான்கரை மணித்தியாலங்களுக்கும் பிற்பகல் 5.30 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 50 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.