இன்று முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் அடையாள அட்டை

15 வயதிற்கு மேற்பட்ட சகல இளைஞர் மற்றும் யுவதிகளுக்கும் இலங்கையில் இலத்திரனியல் அடையாள அட்டை இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பிளொக் செயின் (Blockchain) எனப்படும் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த இலத்திரனியல் அடையாள அட்டைகளைத் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தமித்த விக்ரமசிங்க (Tamitha Wickramasinghe) தெரிவித்துள்ளார். இது இளைஞர்களின் கல்வி, தொழில்சார் தகுதிகள் மற்றும் ஏனைய தகுதிகளுக்கான தகுதிகளை உள்ளடக்கிய வகையில், அவர்களில் தகவல்களை சேமித்து வைக்கும் வங்கி என்ற விதத்தில் இந்த அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love