இன்று (30) நாட்டில் 10 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, இன்று(30) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் பல்வேறு நேரங்களில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
A முதல் L வரையிலான வலயங்களில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணி நேரமும், B முதல் W வரையான வலயங்களுக்கு 10 மணி நேரமும் மின்தடை ஏற்படும். மேலதிகமாக, M, N, O, X, Y, Z என பல புதிய வலயங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
அந்த பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்வெட்டு அமுலாகும் வலயங்கள் பின்வருமாறு
A,B,C,D,E,F – மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணி நேரம்.
G,H,I,J,K,L – காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை 6 மணி நேரம் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 4 மணி நேரம்.
P,Q,R,S – மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணி நேரம்.
T,U,V,W – காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை 6 மணி நேரம் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 4 மணி நேரம்.
M,N,O,X,Y,Z – காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 10 மணி நேரம்.