2022 திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பாக இன்று(31) முதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை(02) வரை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலம், நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று(30) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இலக்குடன் இந்த வருடத்திற்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்திருக்கிறார். 2001 ஆம் ஆண்டின் இறுதியில் நிகர தேசிய உற்பத்தியில் 8.2 வீதமாக இருந்தவரி வருவாயை 2025 ஆம் ஆண்டளவில் 15வீதமாக இருமடங்காக்குவதை பட்ஜெட் இலக்காகக் கொண்டிருக்கிறது. பெறுமதி சேர்வரி, செப்ரெம்பர் முதல் 12வீதத்திலிருந்து 15 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மே 31 அன்று 8 வீதமாக இருந்த வற்வரியை 12 வீதமாக ஆக உயர்த்திய பிறகு இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.
அதே சமயம் வருடாந்த வருமானதை கருத்தில் கொள்ளாமல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் கட்டாய வரிப்பதிவை அறிமுகப்படுத்த நிதியமைச்சரான ஜனாதிபதி விக்கிரமசிங்க இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தில் முன்மொழிந்திருக்கிறார். 2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேலதிகமாக 2% க்கும் அதிகமான தை பெற்றுக்கொள்வதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாகவும், அதன் பின்னர் அது மேலும் மேம்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“2021 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 110 வீத ஆக இருந்த அரச கடனை இடைக்காலத்தில் 100 சதவீதத்திற்கு மேல் குறைப்பதை இலக்கு வைத்துள்ளோம்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். எவ்வாறாயினும், தற்போதைய நெருக்கடி மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் அரசியல் ரீதியாக விரும்பத்தகாத சீர்திருத்தங்கள் காரணமாக பட்ஜெட்டை ஒரு ‘அபிலாஷை’ கொண்ட இலக்காக ஆய்வாளர்கள் பார்க்கின்றனர். இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் மீட்பு பொதி தொடர்பான இலங்கையின் பேச்சுக்களில் உறுதியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் மத்திய வங்கியின் சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த மாதம் ஜனாதிபதியாக பதவியேற்றகாலம் முதல் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காக நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவர் அழுத்தம் கொடுத்துவருகின்றார். தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவுடனான பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் கொண்டுள்ளதாகவும் விக்கிரமசிங்க கூறி னார். “இந்த நிதி நெருக்கடி எவ்வளவு தீவிரமானது என்பது பலருக்கு இன்னும் தெரியாது, ஆனால் கடந்த கால தவறுகளை சீர் செய்வதற்கும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் மற்றும் தற்போது நாம் எதிர்கொள்ளும் சவால்களில் இருந்து எம்மை வெளியேற்றும் நீண்ட கால கொள்கைகளை செயற்படுத்துவதற்கும் இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
“நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் சாதகமான தருணத்தை எட்டியுள்ளன, மேலும் இலங்கையின் கடனை எவ்வாறு நிலையான பாதையில் கொண்டு செல்வது என்பது குறித்து கடன் வழங்குநர்களுடன் நாங்கள் கலந்துரையாடுவோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிதி நிர்வாகத்தை வலுப்படுத்தவும், அதிக அந்நியச் செலாவணி உள்ள நிறுவனங்களை மறுசீரமைக்கவும் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடவும் தனி புதிய சட்டங்கள் கொண்டு வரப்படுமெனவும் ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்.
வரி மறுசீரமைப்புகள்
- வற் 12%-15% அதிகரிப்பு
- உள்ளூர் விவசாய உற்பத்திகளுக்கான உணவுப்பொருள் பொதி
தொழிற்சாலைகளுக்கு வரி நிவாரணம்
- 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் உள்நாட்டு இறை வரித் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும்.
உள்நாட்டு உற்பத்தித்துறை மேம்பாட்டு இலக்குகள்
- பெரும்போக செய்கைக்காக அமெரிக்க உதவித் திட்டத்தின் கீழ் 40 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
- கால்நடை தொழில்துறை அபிவிருத்திக்கு 200 மில்லியன் ரூபா
- அரசநிலங்கள் இளைஞர் பயன்பாட்டிற்கு விவசாயம் , விலங்கு வேளாண்மைக்கு 50 மில்லியன் ரூபா
- மலையகத்திலிருந்து கொழும்புக்கு ரயில் மூலம் காய்கறிகள் – விசேட திட்டத்துக்கு 200 மில்லியன் ரூபா
சமூக நலனோம்பல் திட்டங்கள்
- 2022 நெருக்கடியில் பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு உதவ 32 மில்.குபா
- கர்ப்பிணித்தாய்மாருக்கு 20 ஆயிரம் ரூபா வுடன் மாதாந்தம் 2500ரூபா கொடுப்பனவு
- பொருளாதார நெருக்கடியால் தொழில் இழந்தோரின் நன்மை கருதி புதிய சட்டங்கள்
- வட்டி தவிர்த்து விவசாயிகளுக்கு 800மில்லியன் ரூபா கடன் தள்ளுபடி
- சமூர்த்தி 5 ஆயிரம்ரூபாவிலிருந்து 7500 ரூபாவாக அதிகரிப்பு
- சமூர்த்தி கொடுப்பனவுக்கான காத்திருப்போர் பட்டியலில் உள்ள 726000 குடும்பங்களுக்கு தற்காலிகமான 5000 ரூபா கொடுப்பனவு
- மீனவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம்
- மிகவும் அவசர உதவி தேவைப்படும் போஷாக்கு குறைந்த 61 ஆயிரம் குடும்பங்களுக்கு 4 மாதங்களுக்கு இந்த மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா நிவாரண உதவி
- முதியோர், அங்கவீனமுற்றோர் , சிறுநீரக நோயாளர்களுக் கான கொடுப்பனவு 5000 ரூபாயிலிருந்து 7500 ரூபாவாக அதிகரிப்பு
- முதியோர், அங்கவீனமுற்றோர் , சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுக்கான காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு தற்காலிகமாக 5000 ரூபா கொடுப்பனவு
அரசநிறுவனங்கள் மறுசீரமைப்பு
- அரசசெலவினம் குறைப்பு
- அரசசேவை வாழியர் ஓய்வு பெரும் வயதெல்லை 60 ஆக குறைப்பு
- அரசசேவைகள் பாவனைக்கு மின்சக்தி வாகனங்கள் மட்டுமே இறக்குமதி
- ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் , மின்சாரசபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம் உட்பட அரசநிறுவனங்கள் மறுசீரமைப்பு – இதற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
- திறைசேரியின் கீழ் தேசிய கடன் முகாமைத்துவ முகவரமைப்பு மறு சீரமைப்பு
- இலங்கை வங்கி , மக்கள் வங்கியின் 20வீத பங்குகள் ஊழியர்கள் மற்றும் வைப்பாளர்களுக்கு வழங்கப்படும்
அரசவருவாயை அதிகரிக்கும் திட்டங்கள்
- சுற்றுலா தொழில் துறை மேம்பாட்டுக்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
- அந்நியச்செலாவணி கையிருப்பை அதிகரிக்க வெளிநாட்டு மாணவர்களை கவர்வதற்கு தனியார், இணைந்த பல்கலைக்கழகங்கள்
- ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க மேலதிக அரச ஆதரவு
- புலம் பெயர்ந்தோருக்கான நிதியம்
- வரி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பணம் அச்சிடுவதை குறைக்க நடவடிக்கை
உள்சார் கட்டமைப்பு இலக்குகள்
- மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள்
- தொழில் பயிற்சி நிறுவனங்கள் ஊடாக தொழில் பயிற்சியை மேம்படுத்தும் திட்டங்கள்
- பிரதேசசபை, நகரசபை மற்றும் மாநகரசபைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப் படும் சேவைகளை விஸ்தரிக்கும் வகையில், சில பிரதேசசபைகளை, அண்மையில் உள்ள நகரசபைகளுடன் இணைக்க நடவடிக்கை