இறப்பர் –அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவு – எடுத்த முடிவு ?

பத்து இலட்சம் மெட்ரிக்தொன் அரிசி தொகையை நாட்டிற்கு நன்கொடையாக வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் குறித்த அரிசித்தொகை நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்

Spread the love