கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான நேபாளத்தின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக பாசு தேவ் மிஸ்ரா இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் நேபாள அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று சமர்ப்பித்தார்.