இலங்கைக்கு அவசர உதவி, உலக வங்கி விரைவுநிலை!


இலங்கைக்கு அவசரநிவாரண உதவியை வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. முதலாவதாக அத்தியாவசிய மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

அந்த நிதியை உலக வங்கியின் கொவிட் சுகாதார செயற்றிட்டம் வழங்கவுள்ளது. அதேவேளை உணவு, பயிர் உற்பத்திக்கான விதைகள், உரம் என்பவற்றைப் பெறுவதற்கும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Spread the love