இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும், முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்கா தயார்!

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் இலங்கையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன்(Anthony Blinken) உறுதியளித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று(13) மாலை அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் தொலைபேசியில் உரையாடினார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் அடுத்த நகர்வு!! இலங்கைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா உறுதிமொழி

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து தொலைபேசியில் உரையாடலின் போது பிரதமர் விளக்கினார்.

அமெரிக்காவுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கை விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க அரச தலைவர் ஜோ பிடனுக்கு(Joe Biden) தனது வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளின்கனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  

Spread the love