இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தது சீன உளவுக்கப்பல்

சீனாவின் யுவான் வாங் 5 உளவுக் கப்பல் நேற்று மாலை இலங்கையை அண்மித்து இந்து சமுத்திரத்தில் நிலைகொண்டிருந்தது. இலங்கை கடல் எல்லைக்குள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் நேற்று மாலை இந்தக் கப்பல் நிலைகொண்டிருந்தது. இந்தக் கப்பல் நேற்று 11 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையாது என்று ஹம்பாந்தோட்டை துறைமுக அதிபர் தெரிவித்துள்ளார். தனது அனுமதியின்றி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் எந்த கப்பலும் பிரவேசிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து எந்த அறிவிப்பும் நேற்றிரவு வரை வெளியிடப் படவில்லை . அதிநவீன ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட சீனாவின் உளவுக் கப்பலின் இலங்கை வருகையை தாமதிக்குமாறு இலங்கை வெளியுறவு அமைச்சு ஏற்கனவே சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், யுவான் வாங் 5 ஏற்கனவே இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்தது.

நேற்று மாலை வரை இந்தக் கப்பல் இலங்கைக்கு அருகே  முன்னேறி வருகிறது. யுவான் வாங் 5 சீனத் துறைமுகத்திலிருந்து ஜூலை 14 ஆம் திகதி வெளியேறியது. இது வரை அதன் வழியில் எந்தவொரு துறை முகத்திலும் நுழையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love