இலங்கையில் நிலவும் நிலைமை குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன் இலங்கையின் நிலைமை குறித்து கலந்துரையாடினார். ஜெய்சங்கருடனான சந்திப்பின் போது உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் தாக்கங்கள் மற்றும் இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து விவாதித்ததாக பிளின்கன் ட்வீட் செய்துள்ளார்.
கம்போடியாவில் உள்ள புனோம் பென் நகரில் அமெரிக்க – ஆசியான் அமைச்சர்கள் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஆசியான் பிராந்திய மன்றம் ஆகிய கூட்டங்களின் புறம்பாக இந்த சந்திப்பு நடந்தது. இதற்கிடையில் பிளிங்கன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் இலங்கை சவால் மற்றும் நெருக்கடியான தருணத்தில் இருப்பதாகவும் ஆனால் இன்னும் ஜனநாயகம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பிளிங்கன் கூறியுள்ளார்.