ஈராக் தலைநகர் பக்தாத்தில் பாரிய மணல் புயல் உருவாகியுள்ளதாகவும் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினத்தில் தோற்றம் பெற்ற இந்த மணல் புயல் இன்று பாரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும் இதனால் நகரில் பாடசாலைகள் உட்பட அனைத்து தொழில்துறைகளும் செயற்பட முடியாதளவிற்கு முற்றிலும் செயலிழந்துள்ள நிலை காணப்படுகின்றது. அதே நேரம் மக்கள் சுவாசப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையும் தோன்றியுள்ளது. மணல் புயல் காரணமாக சுத்தமான ஒட்சிசன் கிடைக்காது மக்கள் அவதியுறுவதாகவும் மருத்துவமனைகளில் மக்கள் ஒட்சிசன் பெற்றுக்கொள்வதற்கு முண்டியடித்துக் கொண்டு இருப்பதாகவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.