உக்ரைன் எல்லையில் படைகள் வாபஸ் இல்லை.. கூடுதல் படைகளை குவிக்கிறது ரஷ்யா.. நேட்டோ, அமெரிக்கா புகார்

வாஷிங்டன்: உக்ரைன் எல்லை அருகே கூடுதல் படைகளை ரஷ்யா குவித்து வருவதாக நேட்டோவும் அமெரிக்காவும் குற்றம்சாட்டி வருகிறது.

நேட்டோ கூட்டமைப்பில் இணைய சோவியத் நாடான உக்ரைன் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் உக்ரைன் பக்கம் நிற்கின்றன,

இந்த நிலையில் உக்ரைன் எல்லையான கிரிமியாவில் ரஷ்யா பீரங்கி டாங்கிகள், படைகளை குவித்து வருகிறது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் சூழல் நிலவுவதாக அமெரிக்கா தெரிவித்தது. உக்ரைன் மீது போர் புரிந்தால் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டால் உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதாக கனடா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் இருந்த ரஷ்ய படைகள் வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதை ரஷ்யாவும் உறுதி செய்தது.

உக்ரைன் மீது நிச்சயமாக போர் புரியும் எண்ணமில்லை என்றும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புவதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்திருந்தார். நேற்று காலை உக்ரைனின் கிரிமியா பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறும் வீடியோவை ரஷ்ய பாதுகாப்புத் துறை வெளியிட்டது. புதன்கிழமையான நேற்றைய தினம் ரஷ்யா உக்ரைன் மீது போர் புரியும் அச்சம் நிலவிய நிலையில் உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டு கொடியை ஏந்தி, அந்நாட்டு தேசிய கீதத்தை பாடியபடி ஒற்றுமையை காட்டினர்.

Spread the love