ஐரோப்பிய நாடான பிரான்ஸின் பாரிஸில் உலக பிரசித்தி பெற்ற ஈபெல் கோபுரம் (Eiffel Tower) அமைந்துள்ளது. இது 1889 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போது அதன் உயரம் 1024 அடியாக இருந்தது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கும் இந்த கோபுரம் முழுவதும் இரும்பினால் ஆனது.
தற்போது இந்த கோபுரத்தை 6 செண்டிமீட்டர் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோபுரம் மீது தொலைத்தொடர்பு துறை Antenna 20 அடி உயரத்தில் வைக்கப்படவுள்ளது. இதனால் கோபுரம் 1063 அடியாக உயர்த்தப்படவுள்ளது.