ரஷ்யா மீது மேலும் தடைகளை விதிப்பது “நிலைமையை மேலும் மோசமாக்கும்” என உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைகளை எதிர்ப்போருக்கு ரஷ்ய அதிபர் புட்டின் கூறியுள்ளார்..
ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ரோசியா 24 (Russia 24) எனும் அந்நாட்டு அரச செய்தி சேவையில் ஒளிபரப்பான அரசாங்க கூட்டமொன்றில் அதிபர் புடின் பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார்.அதில், அவர் கூறும்போது “எங்கள் அண்டை நாடுகளுக்கு எதிராக நடக்க எங்களுக்கு எவ்வித தீய நோக்கங்களும் இல்லை” என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார்.
மேலும் “நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் மோசமாக்கும்” வகையிலான கூடுதல் நடவடிக்கைகளை அண்டை நாடுகள் எடுப்பதற்கான “எவ்வித அவசியமும் எங்களிடமிமில்லை ” என தங்கள் அரசு கருதுவதாக அவர் தெரிவித்தார்.“உறவுகளை எப்படி இயல்புநிலைக்குக் கொண்டு வருவது, அவற்றுக்கு எவ்விதம் ஒத்துழைப்பை நல்குவது மற்றும் உறவுகளை எவ்விதம் மேம்படுத்துவது குறித்துத்தான் அனைவரும் சிந்திக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்” எனவும் அவர் மேலும் கூறினார்.
ரஷ்யா மீதான அழுத்தத்தை எப்படி தொடர்வது என்பது குறித்து ஆலோசிக்க, மேற்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில்” (Brussels) மாநாடு கூட்டியுள்ள நிலையில், புடின் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடாததக்கது.
இதுவரை ரஷ்ய ராணுவம் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும், “ரஷ்யாவுக்கு எதிரான சில வெறுப்பு நடவடிக்கைகளின் விளைவாகவே மேற்கொள்ளப்பட்டன” என்ற தன் முந்தைய கூற்றை மீண்டும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன் வைத்தார்.