உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று(23/02/23)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று(23) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் W.M.R.விஜேசுந்தரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்துமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த மனு கடந்த 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மனு மீதான பரிசீலனையை இன்று(23) வரை ஒத்திவைப்பதற்கு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தீர்மானித்திருந்தது.

இதனிடையே, தேர்தலின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய வழக்கு விசாரணைகளின் பின்னர் அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். 

Spread the love