ஊடகசுதந்திர தரப்படுத்தல் இலங்கைக்கு 146ஆவது இடம்

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் 2022ஆம் ஆண்டுக்கான ஊடக சுதந்திர தரப்படுத்தலில் இலங்கை 146ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

180 நாடுகளைக் கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்தத் தரப்படுத்தலில், 2021 ஆம் ஆண்டில் 127ஆவது இடத்தில் இருந்த இலங்கை இந்த வருட தரப்படுத்தலில் 19 இடங்கள் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திர பிரச்சினைகள் மோதலுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. பன்முகத்தன்மை இல்லாத மற்றும் பிரதான அரசியல் அணிகளைச் சார்ந்துள்ள காரணத்தால் ஊடகத்துறை ஆபத்தில் இருக்கின்றது. ஐந்தில் ஒரு இலங்கையரே அரசியல் ரீதியில் சுதந்திரமான ஊடகங்களை அணுகக்கூடியவராக இருக்கின்றார் என்றும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களிலும் முறையே நோர்வே, டென்மார்க், சுவீடன் ஆகியன உள்ளன. இறுதி மூன்று இடங்களிலும் முறையே வடகொரியா, எரித்திரியா, ஈரான் ஆகியன உள்ளன

https://rsf.org/en/index

Spread the love