ஏவுகணைச் சோதனைகளை நிறுத்திவிட்டு வட கொரியா பேச்சுவார்த்தைக்கு திரும்பவேண்டும்

வடகொரியா தனது ஏவுகணைச் சோதனைகளை நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தைக்கு திரும்பவேண்டுமென, அமெரிக்காவும், தென் கொரியாவும் வலியுறுத்தியுள்ளன. வடகொரியாவிற்கான அமெரிக்காவின் சிறப்புப்பிரதிநிதி சங் கிம், கொரியத் தீபகற்பத்தின் தென் கொரியாவிற்கான சிறப்புப் பிரதிநிதி நோகியு -டுக்கை சியோலில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பிற்குப் பின்னர் கருத்து தெரிவித்த வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி சங் கிம், வட கொரியாவின் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடியை வழங்க வேண்டுமென்று, ஒப்புக் கொண்டுள்ளோம். வடகொரியாவிற்கு எதிரான நோக்கம் எதுவும் எங்களிடம் இல்லையென்றும், அந்த நாட்டுடன் எந்தவிதமான நிபந்தனையுமின்றி, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா தயாராகவே உள்ளதாகவும், வடகொரியாவும் பேச்சுவார்த்தைக்கு திரும்பவேண்டுமெனவும், அவர் வலியுறுத்தினார். இந்த வருடத்தில் 13 ஆவது முறையாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓர் ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love