ஐரோப்பாவிற்கு மேலதிக படைகளை அனுப்ப அமெரிக்கா தயார்

ஐரோப்பாவிற்கு மேலதிக படைகளை இந்த வாரத்தில் அனுப்புவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தேசித்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கும் என்ற அச்சம் வலுப்பெற்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. Bragg படைத்தளம் மற்றும் வடக்கு கரோலினாவில் இருந்து போலந்து மற்றும் ஜெர்மனிக்கு சுமார் 2,000 படையினர் அனுப்பப்படவுள்ளனர்.

அத்துடன், ஜெர்மனியில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள 1000 படையினர் ரோமானியாவுக்கு அனுப்பப்படவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ஒரு இலட்சம் படையினரை நிலைநிறுத்தியுள்ள ரஷ்யா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அழிவுக்குரியது என குறிப்பிட்டுள்ளது.

Spread the love