இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மே மாதத்தின் முதல் வாரத்தில் ஜேர்மனி. டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் இந்த விஜயத்தின் போது டென்மார்க்கில் நடைபெறும் இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளார். இதனையடுத்து பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்லும் மோடி பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள், உக்ரைன் விவகாரம் ஆகியவை குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது