உக்ரைன் நெருக்கடி தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய தூதுவர்களிடையே கருத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
உக்ரைன் எல்லையில் 100,000 இற்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதன் பின்புலத்தில் பாதுகாப்பு பேரவையில் விசேட கூட்டம் நடைபெற்றது. ரஷ்யாவின் நகர்வுகளானவை கடந்த பல தசாப்தங்களுக்கு பின்னர் இடம்பெற்ற பாரிய நடவடிக்கையாகும் என அமெரிக்கத் தூதுவர் Linda Thomas-Greenfield இதன்போது தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தமது உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா அனாவசியமாக தலையிடுவதாக ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்குமாயின் ரஷ்யா மீது தடை விதிப்பதாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.