ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை இராணுவம், பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை

இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் 4 மோட்டார் சைக்கிள்கள், பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள வீதித்தடையை அண்மித்த சந்தர்ப்பத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்ட விதம் தொடர்பில் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை இராணுவம், பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இராணுவத் தளபதியால் விடுக்கப்பட்ட இந்த கோரிக்கை தொடர்பில் உடனடியாக செயற்படுவதாக பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளரினால் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின்படி விசாரணை மேற்கொள்ளப்படுவதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

source from newsfirst
Spread the love