கச்சத்தீவுக்கு அருகில் இலங்கை கடற்படையினர் மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையில், ஏற்பட்ட மோதலில் தமிழக மீனவர்களின் விசைப்படகு ஒன்று நீருக்குள் மூழ்கியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படைக்கும் இடையில், ஏற்பட்டு வரும் மோதல்கள் இருதரப்பு படகுகளும் சேதமாவதும், இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் கைதாவதும், இந்திய மீனவர்கள் இலங்கையில் கைதாவதும் தொடர் கதையாகவுள்ளது. அதனை தொடர்ந்து, இருதரப்பு மீனவர்களும் இந்த விவகாரத்தில் உரிய தீர்வொன்றை வழங்குமாறு பல காலமாக இருதரப்பு அரசுகளிடமும் வலியுறுத்திய வண்ணமே உள்ளன.
இராமேஸ்வரத்தில் இருந்து 550க்கும் மேற்பட்ட படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்த நிலையில், அங்கு ரோந்து பணிகளிலில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மீனவர்களின் விசைப்படகொன்றுடன் மோதுண்டதில், அவ்விசைப்படகு நீரில் மூழ்கியதாகவும் பின்னர் அந்த படகில் இருந்த 7 மீனவர்கள் கடலில் தத்தளித்த நிலையில், சக மீனவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு கரை சேர்த்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.