கண்டம்விட்டு கண்டம் பாயும் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணையை வியாழக்கிழமை வெற்றிகரமாக தாம் சோதனை செய்ததாக, வடகொரியா அறிவித்துள்ளது.
2017-ம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியா இத்தகையை கண்டம்விட்டு கண்டம் பாயும் பொலிஸ்டிக் ஏவுகணையை முதல்முறையாக வியாழக்கிழமை சோதனை செய்துள்ளது.
அதிக தொலைவுக்கு செல்லக்கூடிய இந்த அதிநவீன ஏவுகணைகள், அமெரிக்கா வரை செல்லக்கூடிய அளவு திறன்படைத்தவையாகும். இந்த ஏவுகணைகளை சோதனை செய்வதற்கு வடகொரியாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பு இத்தகைய சோதனைகளை மேற்கொண்ட காரணத்துக்காக , அதிக தடைகளை அந்நாடு சந்திக்க நேர்ந்தது, மீண்டும் இந்த சோதனையை வடகொரியா தற்போது பல சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளது.
இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா அதிபர் கிம் ஜோங்-உன் நேரடியாக நின்று வழிநடத்தினார் என, அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்து நிற்கின்றன . இந்த ஏவுகணையானது அணு ஆயுதங்களை ஏந்தி சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் விசேட திறன் கொண்டவையாகும், என கூறப்படுகிறது.