கப்டனாக பென் ஸ்டோக்சை நியமிக்க வேண்டும்- ரிக்கி பாண்டிங்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது டெஸ்டில் இங்கிலாந்து தோற்றால், தொடர்ந்து 10 டெஸ்டில் தோற்ற அணி என்ற மோசமான சாதனைக்கு அந்த அணி ஆளாகிவிடும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் பென் ஸ்டோக்சை நியமிக்க வேண்டும் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் கப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

கடந்த சில போட்டிகளில் பெற்ற தோல்வியின் எதிரொலியால் இங்கிலாந்து கப்டன் ஜோ ரூட் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார். இந்த நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் கப்டனாக நியமிக்கப்பட்டால் இங்கிலாந்து அணி வெற்றி பெற முடியும் என தெரிவித்துள்ளார்.

Spread the love