காந்தியின் ‘விருப்பப்பாடல்’ குடியரசு நிகழ்ச்சியில் நீக்கம்

இந்தியக்குடியரசு தின நிகழ்வில் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடல் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ‘சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ பாடல் இசைக்கப்படவுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்திக்கு விருப்பமான ‘Abide with me’ என்ற பாடல் 1950ஆம் ஆண்டில் இருந்து இசைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முறை நடைபெறவுள்ள குடியரசு தின விழா இறுதி நிகழ்வில் இப்பாடல் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பும் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். 

Spread the love