கிழக்குமாகாணத்தில் கரை ஒதுங்கும் பல வெளிநாடுகளின் கழிவுகள்

கிழக்குமாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேத்தாதீவு, களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம் உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில் பல வெளிநாடுகளின் பெயர் பொறிக்கப்பட்ட கழிவுகள் கரை ஒதுங்குகின்றன என பொதுமக்களும், மீனவர்களும் தெரிவிக்கின்றனர்.

காலணிகள், வெற்றுப்போத்தல்கள், குளிர்பானபோத்தல்கள், மூங்கில்கள் உள்ளிட்ட பல பொருள்கள் கடலலையில் அள்ளுண்டு கரையொதுங்குகின்றன எனவும், இதனால் சூழலுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும், கடற்கரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இந்தக் கழிவுகள் பெரும் தடையாகக் காணப்படுகின்றன எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கரையொதுங்கும் சில வெற்றுப்போத்தல்களில் மியன்மார் என ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

Spread the love