கிழக்கு உக்ரைனின் பெரும்பகுதியை ஆக்கிரமித்த ரஷ்யா

கிழக்கு உக்ரைனில் உள்ள (Luhansk) லுஹான்ஸ்க் பிராந்தியமானது சுமார் 70 சதவீதம் ரஷ்ய துருப்புக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று லுஹான்ஸ்க் ஒப்லாஸ்ட்டின் கவர்னர் செர்ஹி ஹைடாய் தெரிவித்தார்.

கிவ்யேயின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தொடர்ந்தும் ஷெல்கள் வீழ்ந்து வெடித்த வண்ணமாகவே இருந்ததாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்ததுடன், கொல்லப்பட்டும் உள்ளனர்.

இதேவேளை, மக்கள் பாதுகாப்பாக இப்பகுதியை விட்டு வெளியேற மனிதாபிமான வழித்தடங்கள் எதுவுமே அங்கு இல்லை என்றும் ஹைடாய் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

Spread the love