கைப்பற்றியுள்ள இடங்களில் இருந்து வெளியேறி அவற்றை உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு போராட்டக்கார்களிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக அறிக்கையொன்றை நேற்று (13) வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமைதியான போராட்டங்களை தாம் அங்கீகரித்தாலும், சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு தமது சங்கம் ஆதரவளிக்காது என்றும் அந்த அறிக்கையில் சங்கம் சட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, கலவரச் சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என சங்கைக்குரிய ஓமல்பே சோபித தேரர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அமைதியான போராட்டத்தின் கௌரவத்தை தொடர்ந்தும் பேணிக்காக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.