கோவிட்: நம்பிக்கை தரும் வார்த்தைகள்.

இந்த வருட இறுதிக்குள் கொரோனா பெரும் தொற்று நிறைவுக்கு வருமென உலக சுகாதர ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில் வைத்து தலைவர் ரெட்றோஸ் அத்னோம் யெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) இதனை தெரிவித்துள்ளார்.

70 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசிகள் உலகளாவிய ரீதியில் ஜூன், ஜுலை அளவில் ஏற்றப்பட்டு நிறைவடையும். அவ்வாறு நடைபெற்றாலே கொரோனா தொற்று பரவல் முழுமையாக நிறைவுக்கு வருமென அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் கொரோனா தடுப்பு மருந்து நிறுவனத்திற்கு விஜயம் செய்த போதே இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். மொடேனா வகை தடுப்பை மருந்தினை அப்ரிஜன் பயோலொஜிஸ் மற்றும் வக்சீன் நிறுவனம் தயாரித்துளாது.

குறித்த மருந்தானது, 2022 ஆம் ஆண்டு நவம்பர் அனுமதிக்காக வழங்கப்படவுள்ள அதேவேளை, 2024 ஆம் ஆண்டு பாவனைக்கு விடப்படும். இந்த மருந்து வெளியே வரும் பட்சத்தில் விலை குறைந்த கொரோனா தொற்று மருந்தாக இருக்குமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Spread the love