கொழும்பு கைக்குண்டு மீட்பு விசாரணைகளை செய்ய நீதிமன்றம் உத்தரவு

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு இன்று (25/01) உத்தரவிட்டுள்ளது.

குறித்த தேவாலயத்திலிருந்து கடந்த 11 ஆம் திகதி கைக்குண்டொன்று மீட்கப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வரும் நிலையில் இதுதொடர்பில் 7 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Spread the love