இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 16,000 மெட்ரிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அதில் 7,000 மெட்ரிக்தொன் பொன்னி சம்பா அரிசியும் 2,000 மெட்ரிக்தொன் வெள்ளைப் பச்சை அரிசியும் அடங்குவதாக இலங்கை வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் யோகா பெரேரா தெரிவித்தார். இவை இன்று (13) முதல் சதோச மற்றும் கூட்டுறவு நிலையத்தினூடாக விநியோகிக்கப்படவுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கிராம் பொன்னி சம்பா 130 ரூபாவிற்கும் ஒரு கிலோகிராம் வெள்ளைப் பச்சை அரிசி 110 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. அடுத்த வாரத்திற்குள் மேலுமொரு தொகை அரிசி நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறினார்.