சந்தையில் மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாம் இன்னல்களை சந்தித்து வருவதாக உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முட்டைக்கான தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தேவைக்கேற்ப கேக் உள்ளிட்ட தீண்பண்டங்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K.ஜயவர்தன தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகரவிடம் வினவிய போது, 50 ரூபாவிற்கு அதிகமாக முட்டை விற்பனை செய்பவர்களை கைது செய்ய நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்ததை அடுத்து, வியாபாரிகள் முட்டை விற்பனையை நிறுத்தியுள்ளதாக கூறினார்.
இந்த நிலைமையின் கீழ் திறந்த சந்தைகளில் தற்போது முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.