எதிர்வரும் 5ஆம் திகதி முதல் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.
அண்மைக்காலத்தில் அதிகரிக்கப்பட்ட விலைத் தொகையைவிட விலை குறைப்பு அதிகமாக இருக்கும் என செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளார். 50 ரூபாவினால் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது. நிச்சயமாக அத்தொகையைவிட அதிக தொகை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் கூறினார்.