இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல் சிகிச்சைக்காக ஜேர்மனி செல்ல உள்ளார். கே.எல்.ராகுல் ‘தென் ஆபிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு கப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஆனால் காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இந்திய அணியின் கப்டனாக ரிஷப் பண்ட் செயற்பட்டு வருகிறார். இந்த நிலையில் கே.எல்.ராகுல் ஜேர்மனிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக அவர் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.