சீனாவாலும் இந்தியாவாலும் தமிழ்ச் சமூகத்துக்கு அனுகூலங்கள் கிடைக்கும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீனத்தூதுக்குழு நேற்று யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டது. குறித்த விஜயம் தொடர்பில் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென் ஹொங் தெரிவிக்கையில். சீனாவும் இந்தியாவும் சிறந்த நண்பர்கள். சிறந்த பங்காளர்கள். சிறந்த அயலவர்கள். சீனாவும் இந்தியாவும் இலங்கையுடன் நட்பை பேண முடியும் என நான் நினைக்கிறேன். இரு தரப்பினாலும் தமிழ் சமூகத்திற்கு அனுகூலங்கள் கிட்டமுடியும் என கீசென் ஹொங் தெரிவித்தார். இந்த பயணத்தை நீண்ட நாட்களுக்கு முன்னர் திட்டமிட்டிருந்தாலும் கோவிட் தொற்று காரணமாக அது சாத்தியமாகவில்லை. இலங்கையுடனான உறவை மேம்படுத்தும் நோக்கில், இலங்கையின் ஏனைய இடங்களுக்கும் எதிர்காலத்தில் செல்லவுள்ளதாக அவர் கூறினார்.